திருப்பாவை பாசுரம் 3 - Thiruppavai pasuram 3 in Tamil

AstroVed’s Astrology Podcast - Een podcast door AstroVed

கோபிகா பாவனையில் இருக்கும் ஆண்டாள் திருப்பாவையின் மூன்றாம் பாசுரத்தில் நோன்பினால் ஏற்படும் பலன்களை தெரிவிக்கிறாள். மேலும் இந்த பாசுரத்தில் பகவானின் வாமன அவதாரப் புகழைப் பாடுகிறாள். எம்பெருமானைக் காட்டிலும் அவனது திருநாமம் பெருமை வாய்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு கண்ணன் திரௌபதியை சபையில் ஆடை தந்து  காத்த நிகழ்வு. அதனால் தான் ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள். இந்த பாசுரத்தின் பொருளை அதன் பெருமையை மதுசூதன சுவாமி அவர்கள் விளக்கி கூறுகிறார்கள். இந்த பாசுரத்தில் அனுபவிக்கப்படும் திவ்ய தேசம் திருகோவிலூர். இந்த பாசுரத்தின் முழுப் பொருள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.  

Visit the podcast's native language site